ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சுந்தர பாண்டியன்



நண்பர்கள், துரோகம், நண்பர்களுக்காக எதையும் செய்யும் நாயகன் போன்ற சசிகுமாரின் முந்தைய படங்களின் சாயலிலேயே மற்றுமொரு படம்.
முதல் பாதி படம் கதை ஏதும் இல்லாமல் சூரியின் நகைச்சுவையிலேயே நகர்கிறது, சந்தானம் இல்லாத படங்களில் இனி சூரியை பார்க்கலாம், மனிதர் பின்னி இருக்கிறார்.
அப்புகுட்டிக்கு கொடுக்கப்பட்டது சின்ன வேடம் தான் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு காரணமான வேடம், அவரும் நன்றாக செய்திருக்கிறார்.
நண்பர்களாக விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், தென்னவன் மூன்று பேருமே தனது பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.
சசிகுமாரின் அப்பாவாக நரேன், இனி நிறைய படங்களில் இவரை அப்பாவாக பார்க்கலாம்.
இசையமைப்பாளர் ரகுனந்தனுக்கு இது இரண்டாவது படம், ஆனாலும் இதை விட முந்தைய படத்தின் இசையே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. இறுதி காட்சியின் பின்னணி இசையும் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நினைஊட்டுகிறது.
பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதிலும் நன்றாக செய்திருக்கிறார். பாடல்களில் இவருக்கு அதிக அளவு வேலை இல்லை, படத்தின் இறுதி காட்சியில் மட்டும் அவரது உழைப்பு தெரிகிறது.
இயக்குனர் பிரபாகரனுக்கு இது முதல் படம். சசிகுமாரின் துணை இயக்குனர் என்பதால் அவருடைய பாதிப்பு இவரிடமும் இருக்கிறது. நண்பனின் சட்டையை எடுத்து போட்டுகொள்ளும் நண்பன், இதில் இருக்கும் திருப்பம் போன்ற சின்ன சின்ன விசையங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
கதாநாயகியாக லக்ஷ்மி மேனன், சும்மாவே வந்து போகும் கதாநாயகிகள் மத்தியில் இவருக்கு இதில் நடிக்க அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம், அதையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமார், தனது முந்தைய படங்களை விடவும் இதில் அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. இனியும் ஒரே மாதிரியான பாத்திரங்களை செய்யாமல் வித்தியாசமாக செய்தால் நன்றாக இருக்கும்.
சுப்ரமணியபுரம் மாதிரியே படம் முடிந்து விடுமோ என்ற பயத்தை போக்கி சுபமாக முடிகிறது கதை.
ஆக மொத்தம் ஒரு முறை பார்த்து ரசிக்கும் படியாக இருக்கிறது சுந்தரபாண்டியன்.