வெள்ளி, 23 நவம்பர், 2012

மாற்றங்கள்



பேருந்திலிருந்து
இறங்கியதிலிருந்தே
ஒரு சின்ன சந்தேகம்
சேர்ந்துகொண்டே
வருகிறது
இது என் ஊர் தானா?

சத்தியமாய்
இது என் ஊர் தான்
சோல்லிக்கொண்டே
நடந்தேன்

சிறு வயதில்
சம்சு வும் நானும்
சேர்ந்து விளையாடிய
மணல் வீதிகள்
இப்போது
எங்கே போயின?

எப்போதும்
நிறைந்தேயிருக்கும்
அரசன் குளத்தின்
தண்ணீர் எங்கே?
ஓவ்வொறு
வீடுகளின் வாசலிலும்
வளர்ந்து கிடந்த
பூவரசகள்
இப்போது
வீட்டினுள்ளே
குரோட்டன்சுகளாய்

மணற்பரப்பாய் கிடந்த
சினிமா கொட்டகையிலோ
இன்று
வெல்வட்டு சீட்டுகள்

எல்லாமே மாறிவிட்டது

ஏன் அங்கே
ஒரு மனிதனை
ஐந்து பேர்கள்
விரட்டுகின்றனர்?

எல்லாம் மாறினாலும்
மாறவேயில்லை
ஊரில் ஒவ்வொருவாரின்
சாதிய எண்ணங்கள்!


வியாழன், 1 நவம்பர், 2012

நாக்குகள்




எதை வேண்டுமானாலும்
பேசும் இவைகள்
அவரவர் அறியாமலேயே!

சில நேரங்களில்
நண்பர்களையும் திட்டிவிடும்
ஏனென்று தெறியாமலேயே!

அவரவர்க்குடையதாயினும்
இத்தனை ஆட்டம் போடும்
இந்த சதை துண்டுக்கு
யார்தான்
இத்தனை உரிமை தந்தவரோ
அவரே உணராமல்?