திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 செப்டம்பர், 2015





கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள் தனி ஒருவன் மற்றும் பாயும் புலி. இரண்டு படங்களுக்கும் உண்டான ஒற்றுமை: இரண்டு படங்களின் ஹீரோக்களும் போலிஸ் அதே போல இரண்டு படங்களின் வில்லன்களும் தன்னுடைய சுய லாபத்திற்க்காக பெற்ற அப்பாவையே கொல்ல துணிந்தவர்கள்.

ஏ.ஜி.எஸ் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் எழுத்தாளர்கள் சுபா அவர்களின் வசன உதவியுடன், ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவில், இதுவரை நேரடி தமிழ் படங்களை எடுத்திறாது மற்ற மொழி படங்களை மட்டுமே ரீமேக் செய்து வந்துள்ள ஜெயம் ராஜாவாய் அறியப்படும் இயக்குனர் மோகன் ராஜா முதன் முதலாய் தன்னுடைய சொந்த கதையுடன் களம் இறங்கியிருக்கும் படம் தனி ஒருவன். மித்ரன் ஐ.பி.எஸ்ஸாக வரும் ஜெயம் ரவி ஐ.பி.எஸ் பயிற்சியின் போதே தன்னுடன் பயிற்சி பெரும் நண்பர்களின் உதவியுடன் யாருக்கும் தெறியாமல் இரவுகளில் நடக்கும் குற்றங்களை தடுக்கிறார் அதோடல்லாமல் ஒவ்வொரு சிறு சிறு குற்றங்களுக்கும் பின்னனியாய் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய குற்றம் இருக்கும் என்பதை கனித்து, அந்த குற்றங்களின் பின்னனியை ஆராய்ந்து ஊரில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்குமே மூலமாய் திகழும் மூன்று நபர்களின் முழு விவரத்தையும் அறிந்து கொள்கிறார், பயிற்சி முடிந்து ஐ.பி.எஸ்ஸாய் பதவியேற்றதும் அந்த மூன்று பேரில் அதிகம் குற்றம் புரியும் ஒரு நபரை முதலாவதாக டார்கெட் செய்வதே அவருடைய நோக்கமாய் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த மூன்று நபர்களையும் ஆட்டி வைப்பவர் தொழிலதிபர் சித்தார்த் அபிமன்யூவாக வரும் அரவிந்த் சாமிதான் என்பதை அறிந்து கொண்டு தன்னுடைய ஒரே டார்கெட் அவர் தான் என்ற முடிவுக்கு வருகிறார். ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து பதவி ஏற்றதும் அரவிந்த் சாமியின் ஒவ்வொரு திட்டங்களையும் அறிந்து கொண்டு தடையாய் வந்து நிற்கிறார். ஜெயம் ரவிதான் தன்னுடைய திட்டங்கள் செயல்படாமல் போக காரணம் என்பதை தெறிந்து கொண்ட அரவிந்த் சாமி ஜெயம் ரவியின் உடம்பில் மருத்துவர்கள் உதவியுடன் ஒரு சிப்பை பொருத்தி விடுகிறார் இதன் மூலம் ஜெயம் ரவி தனக்கெதிராய் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியையும் இருந்த இடத்தில் தெரிந்து கொண்டு அதர்க்கெதிராய் காய் நகர்த்தி ஜெயம் ரவியின் ஒவ்வொரு திட்டத்தையும் தோல்வியடைய செய்கிறார். ஜெயம் ரவி தனக்குள் பொருத்தியிருக்கும் சிப்பை எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் அரவிந்த் சாமியை எவ்வாறு வீழ்த்துகிறார் என்பதே விறு விறு க்ளைமாக்ஸ்.

ஜெயம் ரவியின் கேரியரில் இது மிக முக்கியமான படம் தன்னுடைய பாத்திர படைப்பை காட்டிலும் வில்லனின் பாத்திரம் வழுவானது என்பதை தெரிந்திருந்தும் மித்ரன் ஐ.பி.எஸ்ஸாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகியாக வரும் நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்திருக்கிறார். படத்தை முழுவதுமாக தாங்கி பிடிப்பவர் வில்லனாக வரும் அரவிந்த் சாமி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றுக்கும் அடி தடியில் இறங்காமல் ஒவ்வொரு காயையும் சாமர்த்தியமாக நகர்த்தும் மிகவும் ஸ்டைலிசான வில்லன் வேடம் அரவிந்த் சாமிக்கு மிகப்பொருத்தம். ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் பாடல்கள் அந்தளவுக்கு படத்திற்க்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் பின்னனி இசை பரவாயில்லை எனும் ரகம். படத்தின் வேகத்திற்கு மிக முக்கிய பங்காக இருப்பது ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவு. எழுத்தாளர்கள் சுபாவுடன் சேர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவும் வசனம் எழுதியிருக்கிறார் பல இடங்களில் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தை பார்த்து வெந்து நொந்து நூடுல்ஸாய் போன நமக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கிறது இந்த படம்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விசால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, டி.இமானின் இசையில், ஒளி இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவில், இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாயும் புலி. மதுரையில் பணத்திற்காக தொழிலதிபர்கள் ஒவ்வொருவராய் கடத்தி கொல்லப்பட கொலையாளிகளை பிடிக்கும் முயர்ச்சியில் ஒரு காவலர் இறந்து விடுகிறார். திருச்சியில் இருந்து மதுரைக்கு மாறுதலாகி வரும் அசிஸ்டெண்ட் கமிஸ்னர் ஜெய சீலனாக விஷால் பதவியேற்க பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே மதுரை வந்து கடத்தல் காரர்கள் அனைவரையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூண்டோடு அழிக்கிறார். எல்லாம் முடிந்து விட்டதாய் நினைக்கும் நேரத்திலும் அடுத்தடுத்து அதே முறையில் கொலைகள் தொடரவே இதற்கு பின்னனியில் வேரொருவர் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட விஷால் அவரை தேடும் முயர்சியில் இறங்குகிறார். அனைத்து கடத்தல் மற்றும் கொலைகளுக்கும் காரணம் விஷாலின் சொந்த அண்ணனாக வரும் இயக்குனர் சமுத்திரக்கனி என்பதை விஷால் எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் என்பதை  சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.


ஏ.சி ஜெயசீலனாக வரும் விஷால் அவருடைய உயரத்திற்கேற்ப போலிஸ் பாத்திரத்தில் சரியாய் பொருந்தியிருக்கிறார். நாயகி காஜல் அகர்வாலுக்கு படத்தில் விஷாலை காதலிப்பதை தவிர வேரு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு விஷாலுக்கு அடுத்தப்படியான முக்கிய கதாப்பாத்திரம் அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். காமெடியனாக சூரி சகலகலா வல்லவனுக்கு பிறகு இதிலும் எரிச்சல் ஊட்டுகிறார், இமானின் இசையில் முயல் குட்டி பாடலும் சிலுக்கு மரம் பாடலும் பரவாயில்லை. சுசீந்தரன் இந்த படத்தை இயக்குனர் ஹரியை மனதில் வைத்து இயக்கியிருப்பார் போல அவருடைய ஃபார்முலாக்கள் அங்கங்கே கொட்டிக்கிடக்கிறது. ஒரு முறை பார்க்கலாம் எனும் சுமார் வட்டத்திற்குள் அடைந்துவிட்டது பாயும் புலி.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015




இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் வாலு மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இந்த இரண்டு படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதையை கொண்டவை கண்டதும் காதல், காதலை ஏற்காத காதலி, சந்தானத்தின் உதவியுடன் காதலை ஏற்க வைக்க போராடும் ஹீரோ முடிவில் சுபம்.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் வாலு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா அவரது நண்பர்களாக சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ளனர். லவ் என்றவன் நீ யாருடா? என்று ஆரம்பித்து என்ன இழவு லவ்வுடா இது என்று பாடி முடித்து சிறிது நேரத்திலேயே ஹன்ஷிகாவை பார்த்த   முதல் பார்வையிலேயே லவ்வுகிறார் காதலை ஏற்காத ஹன்ஷிகாவை சந்தானத்தின் உதவியுடன் துரத்தி துரத்தி காதலை ஏற்க வைக்க முயல்கிறார். இடையில் அன்பான அப்பாவான நரேனின் காட்சிகள் (ஏதோ செண்டிமெண்டா சொல்ல வர்றாங்க போலன்னு நினச்சா ஒரு மண்ணும் இல்ல) ஹன்சிகாவிற்கு முறை பையனாக கோயம்பேடு மார்கெட்டில் பழம் விற்கும் வில்லன்(வில்லனா??) மற்றும் அவருடைய அடியாட்களுடன் சிம்புவை சில இடங்களில் மோத விட்டிருக்கிறார்கள். எல்லா பிரச்சனைகளையும் கடந்து முடிவில் சிம்புவும் ஹன்சிகாவும் சேருவதோடு முடிகிறது படம். படத்தில் முழு நேரமும் சிம்பு புகைப்பிடிக்கிறார் மீதி நேரம் ஹன்சிகாவை காதலிக்கிறார் மற்றும் ரவுடிகளுடன் சண்டை போட்டு வாலிபால் விளையாடுகிறார் வேறு சொல்லிகொள்ளும் படியாக எதுவும் இல்லை.


ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் ராஜேஷின் இயக்கத்தில் வந்துள்ளது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. சிறு வயதிலிருந்தே ஆர்யாவும் சந்தானமும் இணைப்பிரியாத நண்பர்கள் இவர்களில் சந்தானத்திற்கு பானுவுடன் திருமணம் முடிந்துவிட ஆர்யாவின் நட்பை விரும்பாத பானுவோ ஆர்யாவை பிரிந்து வந்தால் தான் நமக்கு முதலிரவு என்று கண்டிசன் போடுகிறார். ஆர்யாவை பிரிய முடியாத சந்தானமோ அவருக்கு ஒரு திருமணம் செய்து வைத்துவிட்டால் அவரே தம்மை பிரிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆர்யாவுக்காக பெண் தேட ஆரம்பிக்கிறார். இந்த பெண் தேடும் படலத்தின் இடையே தமன்னாவை பார்த்ததுமே காதலிக்கிறார் காதலை ஏற்காத தமன்னாவை சந்தானத்தின் உதவியுடன் எப்படி காதலை ஏற்கவைக்கிறார் என்பதே மீதி கதை. படத்தில் முழு நேரமும் ஆர்யாவும் சந்தானமும் சரக்கு ஊத்தி அடிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒரே சரக்கை தான் இந்த படத்திலும் உபயோகித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஆனாலும் இந்த படத்திலோ சரக்கு மேலும் ஜாஸ்தி இது ஒரு சரக்கு படம் என்பதிற்காகவே விஎஸ்ஓபி என்ற சரக்கின் பெயருக்கு ஏற்றார் போல் படத்திற்கு பெயரை வைத்துவிட்டு இது யதார்த்தமாய் நடந்தது என்று எல்லோர் காதிலும் வாழைப்பூவை சுற்றுகிறார் இயக்குனர் மது ஒழிப்பு போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த படத்திற்கு இதனால் எந்த சிக்கலும் வந்து விட கூடாது என்ற பயமாய் இருக்கலாம்(இது என்ன கமல் படமா தடைகள் செய்ய காரணம் தேடுவதற்கு). ஆள் இன் ஆள் அழகுராஜா படத்திற்கு பிறகு இந்த படத்திலும் மொக்கைகளையே காமேடியாக்கி இருக்கிறார், சரக்கடிதிருக்கும் இந்த வாசுவும் சரவணனும் எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

சனி, 28 செப்டம்பர், 2013



இயக்குனர் மிஸ்கினோட ரெண்டு தோல்வி படங்களுக்கு பின்னால வந்துருக்கிற அவரோட அடுத்த படம் தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
இன்னும் அவருக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்குதுன்னு உதயம் சந்திரன்ல தான் தெரிஞ்சுது தியேட்டர்ல ஒரு பத்து பேர் தான் படத்த பாப்போம்னு நெனச்சிட்டு போனேன் ஆனா கூட்டம் வந்துடிச்சு ஆனாலும் இது ஒரே ஆம்பளைங்க கூட்டம் மிஸ்கின் னுக்கு இன்னும் பெண் ரசிகைகள் இல்ல போல.
படத்துல உண்டுனு சொல்றத விட இல்லன்னு சொல்றது தான் அதிகம் படத்துல பாட்டு இல்ல, ஹீரோக்கு ஜோடியா ஒரு ஹீரோயின் கூட இல்ல, மத்த மிஸ்கின் படத்துல வர்ற மாதிரி மஞ்சா புடவ கட்டிட்டு ஒரு டான்ஸ் இல்ல, டாஸ்மாக் பார்ல சரக்கடிக்கிற சீனும் இல்ல, பின்னணி இசையும் இல்ல (இளையராஜா இதுக்கு பண்ணி இருப்பது முன்னணி இசை டைட்டில் கார்ட்லையும் அப்படி தான் போட்ருக்காங்க எப்பவும் போல அவரு கலக்கிட்டாரு)
முதல் பாதி விறுவிறுப்பு பின்னாடி பாதில கொஞ்சம் கம்மியானாலும் நல்ல த்ரில்லிங்கான படம் தான்.
இது எங்கயுமே சுடாம எடுக்கப்பட்ட படம்னா நிச்சயமா நல்ல படம் தான்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கும்கி விமர்சனம்





யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தனது நண்பர் ஒருவருக்காக கோவில் திருவிழா, கல்யாண விழா போன்ற ஊர் விழாக்களுக்கு பழக்க படுத்த பட்ட தன்னுடைய உரிமம் இல்லாத யானையுடன் ஆதி காடு என்ற மலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி அல்லாத தன்னுடைய யானையை கும்கி யானை என்று சொல்லி இரண்டு நாட்களில் திரும்பி விடும் நம்பிக்கையில் வருகிறார்கள் கதா நாயகனான அந்த யானையின் பாகன் விக்ரம் பிரபு, அவரது மாமா தம்பி ராமையா மற்றும் அஸ்வின் ராஜா. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த ஆதி காடு கிராமமே அவர்களை தங்களை காக்க வந்த கடவுளாய் வணங்குகிறார்கள்.

உண்மையான கும்கி யானை வரும் வரைக்கும் ஊர் மரியாதையை அனுபவிக்கலாம் என்று முடிவெடுக்கும் விக்ரம் பிரபு அந்த கிராமத்தின் ஊர் தலைவரின் மகளான லக்ஷ்மி மேனனை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். காதலில் மூழ்கி தவிக்கும் விக்ரம் பிரபு அந்த காதலுக்காக அறுவடை முடியும் வரையிலும் கொம்பன் யானையை விரட்ட அங்கேயே இருக்க முடிவு செய்கிறார்.

உரிமம் இல்லாத யானை, எந்த நேரமும் காட்டுகள் இருந்து ஊருக்குள் இறங்கி விடும் காட்டு யானையின் சூழல், தனது காதல் தெரிந்தால் கட்டுப்பாடான அந்த ஊருக்குள் நடக்க போகும் விபரீதம் இவை மூன்றையும் எப்படி கதா நாயகன் சமாளிக்க போகிறார் இறுதியில் என்ன நடந்தது இது தான் கும்கி படத்தின் கதை சுருக்கம்.

கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம் சிவாஜியின் பேரன் என்றாலும் இன்னும் நடிப்பில் முதிர்ச்சி பெற அனுபவம் தேவை.

நாயகி லக்ஷ்மி மேனனுக்கும் இது தான் அறிமுக படம், மைனா அமலா பாலை போல இவரும் இன்னும் பல படங்களில் வளம் வருவார் என்று நம்பலாம்.

கௌரவ வேடத்தில் தம்பி ராமையா காமெடியிலும் பின்னி இருக்கிறார். கொம்பன் யானை எந்த நேரத்திலும் இறங்கலாம் என்ற தவிப்பில் அவரது நடிப்பை பார்த்து சிரிக்காதவர் யாருமே இல்லை.

இசையமைப்பாளர் டி. இமானுக்கு இந்த படமும் ஒரு முக்கிய படமாக அமைந்து விட்டது பாடல் வெளியான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது ஆனாலும் ஒவ்வொரு பாடலும் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலயே  அந்த பாடலுக்கான இசைய ஆரம்பித்துவிடுவது அடுத்து பாடல் வருவதற்கான உணர்வை தந்துவிடுகிறது.

ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த படத்தில் தனது முழு திறமையையும் காட்டி உழைத்திருக்கிறார். சொல்லிட்டாலே பாடலில் அருவியை அவர் படம் பிடித்த விதம் மிக அருமை, படத்தின் மிக பெரிய பலம் இவரது ஒளிப்பதிவு.

மைனா படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்காக இருந்தும் அதை ஓரளவு தான் சமாளித்திருக்கிறார், திரைக்கதையில் இன்னும் வேகம் தேவை.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்கலாம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சுந்தர பாண்டியன்



நண்பர்கள், துரோகம், நண்பர்களுக்காக எதையும் செய்யும் நாயகன் போன்ற சசிகுமாரின் முந்தைய படங்களின் சாயலிலேயே மற்றுமொரு படம்.
முதல் பாதி படம் கதை ஏதும் இல்லாமல் சூரியின் நகைச்சுவையிலேயே நகர்கிறது, சந்தானம் இல்லாத படங்களில் இனி சூரியை பார்க்கலாம், மனிதர் பின்னி இருக்கிறார்.
அப்புகுட்டிக்கு கொடுக்கப்பட்டது சின்ன வேடம் தான் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு காரணமான வேடம், அவரும் நன்றாக செய்திருக்கிறார்.
நண்பர்களாக விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், தென்னவன் மூன்று பேருமே தனது பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.
சசிகுமாரின் அப்பாவாக நரேன், இனி நிறைய படங்களில் இவரை அப்பாவாக பார்க்கலாம்.
இசையமைப்பாளர் ரகுனந்தனுக்கு இது இரண்டாவது படம், ஆனாலும் இதை விட முந்தைய படத்தின் இசையே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. இறுதி காட்சியின் பின்னணி இசையும் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நினைஊட்டுகிறது.
பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதிலும் நன்றாக செய்திருக்கிறார். பாடல்களில் இவருக்கு அதிக அளவு வேலை இல்லை, படத்தின் இறுதி காட்சியில் மட்டும் அவரது உழைப்பு தெரிகிறது.
இயக்குனர் பிரபாகரனுக்கு இது முதல் படம். சசிகுமாரின் துணை இயக்குனர் என்பதால் அவருடைய பாதிப்பு இவரிடமும் இருக்கிறது. நண்பனின் சட்டையை எடுத்து போட்டுகொள்ளும் நண்பன், இதில் இருக்கும் திருப்பம் போன்ற சின்ன சின்ன விசையங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
கதாநாயகியாக லக்ஷ்மி மேனன், சும்மாவே வந்து போகும் கதாநாயகிகள் மத்தியில் இவருக்கு இதில் நடிக்க அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம், அதையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமார், தனது முந்தைய படங்களை விடவும் இதில் அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. இனியும் ஒரே மாதிரியான பாத்திரங்களை செய்யாமல் வித்தியாசமாக செய்தால் நன்றாக இருக்கும்.
சுப்ரமணியபுரம் மாதிரியே படம் முடிந்து விடுமோ என்ற பயத்தை போக்கி சுபமாக முடிகிறது கதை.
ஆக மொத்தம் ஒரு முறை பார்த்து ரசிக்கும் படியாக இருக்கிறது சுந்தரபாண்டியன்.