இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் வாலு மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இந்த இரண்டு படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதையை கொண்டவை கண்டதும் காதல், காதலை ஏற்காத காதலி, சந்தானத்தின் உதவியுடன் காதலை ஏற்க வைக்க போராடும் ஹீரோ முடிவில் சுபம்.
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் வாலு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா அவரது நண்பர்களாக சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ளனர். லவ் என்றவன் நீ யாருடா? என்று
ஆரம்பித்து என்ன இழவு லவ்வுடா இது என்று பாடி முடித்து சிறிது நேரத்திலேயே ஹன்ஷிகாவை பார்த்த முதல்
பார்வையிலேயே லவ்வுகிறார் காதலை ஏற்காத ஹன்ஷிகாவை சந்தானத்தின் உதவியுடன் துரத்தி துரத்தி காதலை ஏற்க வைக்க முயல்கிறார். இடையில் அன்பான அப்பாவான நரேனின் காட்சிகள் (ஏதோ செண்டிமெண்டா சொல்ல வர்றாங்க போலன்னு நினச்சா ஒரு மண்ணும் இல்ல) ஹன்சிகாவிற்கு முறை பையனாக கோயம்பேடு மார்கெட்டில் பழம் விற்கும் வில்லன்(வில்லனா??) மற்றும் அவருடைய அடியாட்களுடன் சிம்புவை சில இடங்களில் மோத விட்டிருக்கிறார்கள். எல்லா பிரச்சனைகளையும் கடந்து முடிவில் சிம்புவும் ஹன்சிகாவும் சேருவதோடு முடிகிறது படம். படத்தில் முழு நேரமும் சிம்பு புகைப்பிடிக்கிறார் மீதி நேரம் ஹன்சிகாவை காதலிக்கிறார் மற்றும் ரவுடிகளுடன் சண்டை போட்டு வாலிபால் விளையாடுகிறார் வேறு சொல்லிகொள்ளும் படியாக எதுவும் இல்லை.
ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் ராஜேஷின் இயக்கத்தில் வந்துள்ளது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. சிறு வயதிலிருந்தே ஆர்யாவும் சந்தானமும் இணைப்பிரியாத நண்பர்கள் இவர்களில் சந்தானத்திற்கு பானுவுடன் திருமணம் முடிந்துவிட ஆர்யாவின் நட்பை விரும்பாத பானுவோ ஆர்யாவை பிரிந்து வந்தால் தான் நமக்கு முதலிரவு என்று கண்டிசன் போடுகிறார். ஆர்யாவை பிரிய முடியாத சந்தானமோ அவருக்கு ஒரு திருமணம் செய்து வைத்துவிட்டால் அவரே தம்மை பிரிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆர்யாவுக்காக பெண் தேட ஆரம்பிக்கிறார். இந்த பெண் தேடும் படலத்தின் இடையே தமன்னாவை பார்த்ததுமே காதலிக்கிறார் காதலை ஏற்காத தமன்னாவை சந்தானத்தின் உதவியுடன் எப்படி காதலை ஏற்கவைக்கிறார் என்பதே மீதி கதை. படத்தில் முழு நேரமும் ஆர்யாவும் சந்தானமும் சரக்கு ஊத்தி அடிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒரே சரக்கை தான் இந்த படத்திலும் உபயோகித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஆனாலும் இந்த படத்திலோ சரக்கு மேலும் ஜாஸ்தி இது ஒரு சரக்கு படம் என்பதிற்காகவே விஎஸ்ஓபி என்ற சரக்கின் பெயருக்கு ஏற்றார் போல் படத்திற்கு பெயரை வைத்துவிட்டு இது யதார்த்தமாய் நடந்தது என்று எல்லோர் காதிலும் வாழைப்பூவை சுற்றுகிறார் இயக்குனர் மது ஒழிப்பு போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த படத்திற்கு இதனால் எந்த சிக்கலும் வந்து விட கூடாது என்ற பயமாய் இருக்கலாம்(இது என்ன கமல் படமா தடைகள் செய்ய காரணம் தேடுவதற்கு). ஆள் இன் ஆள் அழகுராஜா படத்திற்கு பிறகு இந்த படத்திலும் மொக்கைகளையே காமேடியாக்கி இருக்கிறார், சரக்கடிதிருக்கும் இந்த வாசுவும் சரவணனும் எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
வாலு (தம்) vs வாசுவும் சரவணனும் (சரக்கு)