வெள்ளி, 31 ஜூலை, 2015

மேமனும் மரண தண்டனையும்




6 டிசம்பர் 1992 தேதியில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே மதக்கலவரங்கள் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் 12 மார்ச் 1993 தேதியில் மும்பையில் தொடர்ந்து 13 இடங்களில் வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுவோர் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆவர்.

இந்நிலையில் டைகர் மேமனின் சகோதரரான யாகூப் மேமன் நடத்தி வந்த நிறுவனங்கள் மூலமாக தான் இந்த குண்டுவெடிப்பிர்க்கான நிதி உதவிகள் நடைபெற்றதாக குற்ற சாட்டுகள் எழுந்தன. இதற்க்கு பிறகான நிகழ்ச்சிகளாய் இருவேறு மாறுப்பட்ட நிகழ்வுகள் சி.பி.ஐ தரப்பிலும் யாகூப் மேமனின் தரப்பிலும் கூறப்படுகிறது.

சி.பி.ஐ தரப்பிலோ யாகூப் மேமனை 5 ஆகஸ்ட் 1994 தேதியில் புது டில்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் யாகூப் மேமன் தரப்பிலோ தனக்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லாததை நிருபிப்பதற்காகவே அவர்  இந்தியா வந்து சரணடைந்ததாகவும் ஆனால் சி.பி.ஐ யோ அவரை அவர்களே கைது செய்தது போலவும் உண்மையை திசை திருப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. யாகூப் மேமன் தாக்கல் செய்திருந்த கருணை மனுவும் கடந்த 11 ஏப்ரல் 2015 தேதியில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் யாகூப் மேமன் 30 ஜூலை 2015 தேதியில் நாக்பூர் சிறையில் காலை 6.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனையை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்குகள் நடைப்பெற்ற தினத்தன்றே யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டிருப்பது வருந்ததக்கது.

இந்த சந்தர்ப்பவச நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் பொழுது விருமாண்டி திரைப்படத்தில் வரும் கொத்தாள தேவன் சொல்லும் கதையும் மரண தண்டனை விதிக்கப்பட்ட விருமாண்டி சொல்லும் கதையும் தான் நினைவில் வந்து வந்து செல்கிறது. இந்த நிகழ்வுகளில் உண்மை என்பது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும் அனால் யாகூப் மேமனுக்கு ஏற்பட்ட இந்த முடிவிற்கும் விருமாண்டி படத்தில் இறுதியாக சொல்லப்பட்ட முடிவான கருத்தை  தான் செய்திருக்க வேண்டும், "எந்த ஒரு குற்றத்திற்குமே மரண தண்டனை என்பது ஒரு தீர்வே அல்ல"

ஏவுகணை நாயகர்




பாரதி கண்ட அக்கினி குஞ்சை
வளர்த்தெடுத்து சிறகு முளைக்க
பறக்க செய்தவரே!
ஏவுகணைகளும் எந்திரங்களும்
எளிதாய் வசப்படுத்திய
ஏவுகணை நாயகரே!
தூக்கத்தில் வந்த
கனவுகளையும் கூட
தூங்கவிடாமல் செய்யும்
கனவுகளாய் மாற்றியவரே!
அணுவிலும் அமைதிக்கண்ட
அதிசயப்பிரவியே!
அமெரிக்காவின் செயற்கைகோளையே
அரலச்செய்த ஆச்சரியமே!
தமிழ்வழிக்கல்வியிலும்
அறிவியலை சாத்தியப்படுத்திய
அறிவியல் சக்கரவர்த்தியே!
பெயரின் பின்னால் சேர்ந்ததற்காய்
பத்மபுஷனையும் பாரதரத்னாவையும்
பெருமைப்பட செய்தவரே!
உம் தலையிலிருந்து
வழிந்ததெல்லாம்
வெள்ளை முடிகளல்ல
ஒவ்வொன்றும் மூளைகலென
உலகரியச்செய்தவரே!
காந்தி காலத்தில்
வாழமுடியாக்குறை தீர்த்த
எங்கள் விஞ்ஞான காந்தியே!
இன்று
உமது விரல்படவே
காத்துக்கிடக்கிறது
கரும்பலகைகள்!
உமதுரை கேக்கவே
தவம் கிடக்கிறது
மாணவ செவிகள்!
உமது குரலெழுப்பவே
ஏங்கி தவிக்கிறது
ஒலிப்பெருக்கிகள்!
உம் கைப்படவே
நாதத்தை சுமந்தப்படி
உமது வீணை!
புண்ணியம் தரும்
அந்த இராமேஸ்வரமே
உம்மில் புண்ணியம்
தேடிக்கொண்டது!
வெறும் கண்ணீர் அஞ்சலியுடன்
முடிந்துவிடுவதல்ல
உமக்கான அஞ்சலி
இந்தியா வல்லரசு என்பதே
உமக்கான உண்மையான அஞ்சலி!
விரைவில் வரும் அந்த காலம்
அதற்காய் எங்களை ஆசிர்வதியுங்கள் கலாம்!!!

சனி, 11 ஜூலை, 2015




பீஷ்மர் - சத்யராஜ்
திருதராஷ்ட்டிரன் - நாசர்
துரியோதனன் - டகுபதி ராணா
அர்ஜுனன் - பிரபாஸ்
திரெளபதி - அனுஷ்கா