வெள்ளி, 5 ஜூன், 2015



அண்மை காலமாகவே சில விளம்பரங்களும் அதில் நடித்த நடிகர்களும் விமர்சனத்திற்குள்ளாவது நடைபெற்று வருவதை காண்கிறோம். நிச்சயம் நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பது அவசியம், இது வெறும் நடிப்பு தான் எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விலகிகொள்வது நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான்.

மிகப்பெரிய கார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகர் ஆமிர்கானும்(http://movies.ndtv.com/…/aamir-khan-says-no-to-big-ad-deals…), வேட்டி விளம்பரத்தை ஒதுக்கிய நடிகர் ராஜ்கிரணும்(http://www.vikatan.com/news/article.php?aid=46264), முகச்சாய விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும்(http://www.hindustantimes.com/…/never…/article1-1149723.aspx) பாராட்டுதற்குரியவர்கள்.

ஒரு நடிகனை நடிகனாய் ஏற்றுக்கொள்ளாத இச்சுமூகத்திர்க்கும் இதில் பங்கு உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை. நடிப்பு என்பது வெறும் பொய்யான வெளிப்பாடு என்பதை உணராமல் இந்த நடிகர் நம் பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருக்கிறான் என்று அவரை நம் பக்கத்துக்கு வீட்டு பையனாகவே பாவிப்பது நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியாதது நடிப்பது என்பது அவர்களின் தொழில் என்பதை நாம் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.

நடிப்பு என்பது வெறும் நடிப்பு மட்டுமே அது திரைப்படமாயினும் சரி விளம்பரமாயினும் சரி. இனியும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை குறை சொல்வதை நிறுத்தி விட்டு எந்த பொருள் வாங்குவதாய் இருந்தாலும் நம் அறிவை பயன்படுத்துவதே நல்லது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் 
மெய்ப்பொருள் காண் பதறிவு - குறள் 423

0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

கருத்துரையிடுக