சனி, 6 ஜூன், 2015
மோனோசோடியம் குளூடாமேட்
Posted by Thangaraj Pazhanee on 8:32 PM
கள்ளு இறக்குவதற்கு தடை போட்டு விட்டு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதற்கு சமமானது தான் இன்றைக்கு தடை செய்ய பட்டிருக்கிற மேகி நூடில்சின் தடையும்.
மேகி நூடில்சின் தடைக்கான காரணமாய் சொல்லப்படுவது மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்படிருப்பதே ஆனால் இன்று இந்தியாவில் புற்றிசல் போல் பரவிக்கிடக்கும் அத்தனை சைனீஸ் பாஸ்ட் புட் கடைகளிலும் அதிகமான அளவிலே எல்லா உணவு பொருட்களிலும் இந்த ரசாயன உப்பு கலக்கப்படுவதை நாம் கண்கூடாகவே காணலாம். மேகி நூடில்சை மட்டும் தடை செய்து விட்டதால் எந்த பயனும் இல்லை முதலில் தடை செய்யப்பட வேண்டியது மோனோசோடியம் குளூடாமேட் என்று சொல்லப்படுகிற வேதியியல் உப்பை தான்...
Posted in கட்டுரைகள்
வெள்ளி, 5 ஜூன், 2015
நடிகர்களும் விளம்பரங்களும்
Posted by Thangaraj Pazhanee on 5:56 PM
அண்மை காலமாகவே சில விளம்பரங்களும் அதில் நடித்த நடிகர்களும் விமர்சனத்திற்குள்ளாவது நடைபெற்று வருவதை காண்கிறோம். நிச்சயம் நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பது அவசியம், இது வெறும் நடிப்பு தான் எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விலகிகொள்வது நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான்.
மிகப்பெரிய கார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகர் ஆமிர்கானும்(http://movies.ndtv.com/…/aamir-khan-says-no-to-big-ad-deals…),
வேட்டி விளம்பரத்தை ஒதுக்கிய நடிகர் ராஜ்கிரணும்(http://www.vikatan.com/news/article.php?aid=46264),
முகச்சாய விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும்(http://www.hindustantimes.com/…/never…/article1-1149723.aspx)
பாராட்டுதற்குரியவர்கள்.
ஒரு நடிகனை நடிகனாய் ஏற்றுக்கொள்ளாத இச்சுமூகத்திர்க்கும் இதில் பங்கு உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை. நடிப்பு என்பது வெறும் பொய்யான வெளிப்பாடு என்பதை உணராமல் இந்த நடிகர் நம் பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருக்கிறான் என்று அவரை நம் பக்கத்துக்கு வீட்டு பையனாகவே பாவிப்பது நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியாதது நடிப்பது என்பது அவர்களின் தொழில் என்பதை நாம் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.
நடிப்பு என்பது வெறும் நடிப்பு மட்டுமே அது திரைப்படமாயினும் சரி விளம்பரமாயினும் சரி. இனியும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை குறை சொல்வதை நிறுத்தி விட்டு எந்த பொருள் வாங்குவதாய் இருந்தாலும் நம் அறிவை பயன்படுத்துவதே நல்லது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு - குறள் 423
Posted in கட்டுரைகள்
புதன், 31 டிசம்பர், 2014
மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாய் கூறப்பட்ட குருவான ஆசிரியர்களை பற்றி தான் இந்த பதிவு ஆனால் மதிப்பு மிக்க இந்த மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்களை பற்றி அல்ல நான் சந்தித்த சி(ப)ல கீழ்த்தரமான ஆசிரியர்களை பற்றியது.
முதலாவதாக நான் இங்கே கூறப்போவது இரட்டை அர்த்த ஆசிரியரை பற்றி. இவர் வகுப்பில் பாடத்தின் இடையேயும் இரட்டை அர்த்தம் பொருள் படும் படியாகவே பேசுவார். மாணவ மாணவிகள் என்ன நினைகிறார்கள் என்பதை பற்றி சிறிதும் யோசிக்கவே மாட்டார்.
அடுத்தது போதை ஆசிரியர். வகுப்பிற்கு கூட முழு போதையோடு தான் வருவார். கையில் காசில்லாத நேரங்களில் எங்களிடமே கடன் வாங்கி(திரும்பி வரா கடன்) இருக்கிறார். ஆனாலும் இவரிடம் உள்ள ஒரே நல்ல விஷயம் எவ்வளவு போதையில் இருந்தாலும் என்றும் கண்ணிய குறைவோடு நடந்து கொண்டதில்லை.
அடுத்தது காம பார்வை ஆசிரியர். இவர் படிக்கின்ற மாணவிகளை மட்டும் அல்லாது உடன் பணிபுரியும் ஆசிரியைகளையும் காம கண்ணோடு தான் பார்ப்பார். என்னுடன் பயிலும் மாணவியின் அன்னையும் ஒரு ஆசிரியையாய் பணி புரிந்து வந்தார் மாணவியின் தந்தை அப்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நம் காம பார்வை ஆசிரியர் அந்த மாணவியிடம் உன் அம்மா ஊரில் எந்த ஆண்களிடம் எல்லாம் பேசுவார் தனியாக இருக்கும் போது என்ன செய்வார் போன்ற கேவலமான கேள்விகளை எல்லாம் கேட்டிருக்கிறார்.
அடுத்தது காதல் மன்னன் ஆசிரியர். இவர் என்னுடன் பயிலும் மாணவியிடம் தன் காதலை கூறியுள்ளார்(செருப்படி வாங்கினாரா என்பது அவருக்கும் அந்த மாணவிக்கும் மட்டுமே தெரியும்) இதை அந்த மாணவியே எங்களிடம் கூறி வேதனை பட்டார். அதன் பிறகு எத்தனை மாணவிகளிடம் நூல் விட்டு பார்த்தார் என்பது தெரியவில்லை.
இது போன்ற ஆசிரியர்கள் இன்றுவரையிலும் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை எல்லாம் தெய்வத்திற்க்கு முன்னிலை படுத்தி எப்படி பார்ப்பது?????
Posted in கட்டுரைகள்
வெள்ளி, 19 டிசம்பர், 2014
புழக்கடை முனிகள்
Posted by Thangaraj Pazhanee on 11:39 AM
பெசாவரென்றால்
உயரமான கோட்டையாம்
கோட்டையின் அடித்தளமின்றோ
மண்ணுக்கடியில்
மண்ணோடு மண்ணாய்,
ராணுவ பள்ளியோ
பிள்ளைகளின் சுடுகாடாய்,
கனிஷ்கரின் தலைநகரே
இன்று கண்ணீரில் கொடுநரகாய்
ஏய் தாலிபான் மிருகமே
பள்ளிக்குழந்தைகள்
இன்றுனக்கு பலியாடாய்
நிச்சயம் ஒருநாள் நீயும்
படுகேவலமாய் பலியாவாய்
புத்தகமேந்திய கைகள்
ஏ.கே நாற்பத்தியேழேந்திய
கைகளையும் விட வலியதென்றோ
உன் தோட்டாக்களால் வீழ்த்திட
துணிந்தாய்
விதைத்தவனிருக்க
விரலையருத்து
என்ன சுகம் கண்டாய்???
ஒருவனை நரகத்திர்க்கனுப்பியதற்க்கா???
அந்த நரகத்தையே
பூமிக்கிழுத்து வந்தாய்???
அந்த வெறி நாயின் மகன்கள்
தெரு நாயாய் பிறந்திருக்கலாம்
அல்லது மலமுன்னும் பன்னியாய்.
அவன்களை பெற்றவள்
அன்று கருவாகாதிருந்திருந்தால்,
அந்த பிஞ்சு குழந்தைகள்
இன்று பலியாகாதிருந்திருக்கும்.
தாய்மார்களின் சாபங்களெல்லாம்
தாலிபான்களின் உயிர்குடிக்கட்டும்
உறைந்து கிடக்கும் ஒவ்வொரு உதிரமும்
அவர்களின் உதிரத்தால் மீண்டும் ஈரமாகட்டும் சீக்கிரமாய் அந்த தீவிரவாதத்திற்கே
வாதம் வந்து முடங்கி போகட்டும்
சகோதரர்களே
உங்கள் உயிரின் வலி
நாங்கள் அறிவோம்
உங்கள் எதிரிகள் நிச்சயமாய்
நாங்களில்லை என்பதை
இன்றாவது உணர்ந்துகொள்ளுங்கள்
இதோ என்னால் முடிந்தது
எல்லா இந்தியர்களின் சார்பிலும்
என் விழிநீர்!
- தங்கராஜ் பழனி
Posted in கவிதைகள்
வியாழன், 16 அக்டோபர், 2014
கொடுத்து கொடுத்தே
சிவந்த கை கொண்ட
கருணனின் தகப்பனை
வழிபட்ட அளவு
யாரும் வருனனை
வழிபட்டதில்லை!
வெயிலுக்கு எப்பொழுதுமே
காலமும் நேரமும் உண்டு
உச்சியில் முத்தமிடும்
வெயிலை
என்னதான் நாம்
திட்டி தீர்த்தாலும்
மழையை ஒதுக்கவே
பெரும்பாலும்
குடை பிடிக்கிறோம்!
தொன்னூறுகளில்
சச்சின் நிற்கும் பொழுதில்
குறுக்கிட்டால்
எல்லோர் நாவிலும்
வதை படும்
மழை!
வெயிலுக்கு நிறம் உண்டு
மழையின் நிறமோ இருள்
எப்போதுமே
மழை பெய்து கொண்டேயிருக்கும்
ஊர்களிலெல்லாம்
வெயில் தான் கவிதை!
Posted in கவிதைகள்
ஞாயிறு, 18 மே, 2014
Posted in கவிதைகள்
வியாழன், 13 பிப்ரவரி, 2014
காதலும்
கடவுளும்
ஒன்றுதான்
ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!!
நீ விட்டுச்சென்ற அவ்விடமே
விழித்துகொண்டிருக்கிறது
என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன
காதல்!!!
ஒவ்வொரு திருமணத்திலும்
எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது
காதல்!!!
உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும்
இன்று நண்பனின் காதலியிடம்
அவளுக்காக எழுதப்பட்டதாய்
அவனிடமிருந்து!!!
நீயே வேண்டுமென்றே
வேண்டி நின்றேன்,
நீயோ வேண்டும் என்றே
வேண்டா வெறுப்பில்
எனை வேண்டாமேன்றாய்!!!
அழகான சிறு பொய்கள் சொல்லி
உன்னை ஏமாற்றுபவனாயிருந்தேன்
ஆனாலும்
ஏமாந்து போனதோ நான் தான்
நீ என்னை விரும்புகிறாய்
என்று சொன்ன ஒற்றை பொய்யினால்!!!
ஏதோ தவறு செய்து விட்டு
மன்னிப்பு கேட்டு அழ தொடங்கினாய்,
நானும் அழுதுவிட்டேன்
இன்று தான் புரிகிறது
என்னை மொத்தமாய் அழவைக்க
அது நீ பார்த்த ஒத்திகை என்பது!!!
எனக்கான கல்லறையை
நானே செதுக்கி கொண்டிருந்தேன்
நீ என்னுடனிருந்த வேளைகளிலெல்லாம்!!!
காதலர் தினம் கொண்டாடுவதர்க்காகவே
இங்கு பல காதல்கள்
முளைக்கின்றன!!!
Posted in கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மகாபாரதம் பாகுபலி கதாபாத்திரங்களின் ஒப்பீடு