செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

உணவா மருந்து

வள்ளுவனையும், பாரதியையும் தினந்தோறும் படித்துவந்தேன் அவர்களின் கருத்துகளில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இருவரையும் காண சொர்க்கத்திற்கே சென்றேன் முதலில் வள்ளுவனைக் கண்டேன் அய்யனே வணக்கம் உங்கள் குறட்பாலில் ஒரு சின்ன சந்தேகமென்றேன் என்ன என்று வினவினார் வள்ளுவன் அய்யனே செவிக்குணவில்லாத...

வெள்ளி, 31 ஜூலை, 2015

மேமனும் மரண தண்டனையும்

6 டிசம்பர் 1992 தேதியில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே மதக்கலவரங்கள் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் 12 மார்ச் 1993 தேதியில் மும்பையில் தொடர்ந்து 13 இடங்களில் வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுவோர் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆவர். இந்நிலையில் டைகர்...

ஏவுகணை நாயகர்

பாரதி கண்ட அக்கினி குஞ்சை வளர்த்தெடுத்து சிறகு முளைக்கபறக்க செய்தவரே! ஏவுகணைகளும் எந்திரங்களும் எளிதாய் வசப்படுத்திய ஏவுகணை நாயகரே! தூக்கத்தில் வந்த கனவுகளையும் கூட தூங்கவிடாமல் செய்யும் கனவுகளாய் மாற்றியவரே! அணுவிலும் அமைதிக்கண்ட அதிசயப்பிரவியே! அமெரிக்காவின் செயற்கைகோளையே அரலச்செய்த ஆச்சரியமே! தமிழ்வழிக்கல்வியிலும் அறிவியலை சாத்தியப்படுத்திய அறிவியல் சக்கரவர்த்தியே! பெயரின்...

சனி, 11 ஜூலை, 2015

பீஷ்மர் - சத்யராஜ் திருதராஷ்ட்டிரன் - நாசர்துரியோதனன் - டகுபதி ராணாஅர்ஜுனன் - பிரபாஸ்திரெளபதி - அனுஷ்க...

சனி, 6 ஜூன், 2015

கள்ளு இறக்குவதற்கு தடை போட்டு விட்டு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதற்கு சமமானது தான் இன்றைக்கு தடை செய்ய பட்டிருக்கிற மேகி நூடில்சின் தடையும்.மேகி நூடில்சின் தடைக்கான காரணமாய் சொல்லப்படுவது மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்படிருப்பதே ஆனால் இன்று இந்தியாவில் புற்றிசல் போல் பரவிக்கிடக்கும் அத்தனை சைனீஸ் பாஸ்ட் புட் கடைகளிலும்...

வெள்ளி, 5 ஜூன், 2015

அண்மை காலமாகவே சில விளம்பரங்களும் அதில் நடித்த நடிகர்களும் விமர்சனத்திற்குள்ளாவது நடைபெற்று வருவதை காண்கிறோம். நிச்சயம் நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பது அவசியம், இது வெறும் நடிப்பு தான் எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விலகிகொள்வது நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான். மிகப்பெரிய கார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகர்...

புதன், 31 டிசம்பர், 2014

கு(து)ரு

மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாய் கூறப்பட்ட குருவான ஆசிரியர்களை பற்றி தான் இந்த பதிவு ஆனால் மதிப்பு மிக்க இந்த மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்களை பற்றி அல்ல நான் சந்தித்த சி(ப)ல கீழ்த்தரமான ஆசிரியர்களை பற்றியது. முதலாவதாக நான் இங்கே கூறப்போவது இரட்டை அர்த்த ஆசிரியரை பற்றி. இவர் வகுப்பில் பாடத்தின் இடையேயும் இரட்டை அர்த்தம் பொருள் படும் படியாகவே...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்

பெசாவரென்றால் உய‌ர‌மான‌ கோட்டையாம் கோட்டையின்  அடித்தளமின்றோ மண்ணுக்கடியில் மண்ணோடு மண்ணாய், ராணுவ பள்ளியோ பிள்ளைகளின் சுடுகாடாய், கனிஷ்கரின் தலைநகரே இன்று கண்ணீரில் கொடுநரகாய் ஏய் தாலிபான் மிருகமே பள்ளிக்குழந்தைகள் இன்றுனக்கு பலியாடாய் நிச்சயம்  ஒருநாள் நீயும் படுகேவலமாய் பலியாவாய் புத்தகமேந்திய கைகள் ஏ.கே நாற்பத்தியேழேந்திய கைகளையும் விட வலியதென்றோ உன்...

வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்

கொடுத்து கொடுத்தே சிவந்த கை கொண்ட கருணனின் தகப்பனை வழிபட்ட அளவு யாரும் வருனனை வழிபட்டதில்லை! வெயிலுக்கு எப்பொழுதுமே காலமும் நேரமும் உண்டு உச்சியில் முத்தமிடும் வெயிலை என்னதான் நாம் திட்டி தீர்த்தாலும் மழையை ஒதுக்கவே பெரும்பாலும் குடை பிடிக்கிறோம்! தொன்னூறுகளில் சச்சின் நிற்கும் பொழுதில் குறுக்கிட்டால் எல்லோர் நாவிலும் வதை படும் மழை! வெயிலுக்கு...