தி காட் ஃபாதர் புத்தகம் மிகப்பெரிய வெற்றியடைந்த மகிழ்ச்சியில் நாவலை திரைப்படம் ஆக்குவதற்கான அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியது பாரமவுண்ட் பிக்சர்ஸ். புத்தகத்தை வாசித்த நடிகர் பர்ட் லங்காஸ்டருக்கோ முக்கிய கதாபாத்திரமான டான் விட்டோ கார்லியோனின் கதாபாத்திரத்தில்
தான் தான் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் படத்தின் உரிமையை வாங்க
போட்டி களத்தில் குதித்தார் எனினும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க ராபர்ட் எவான்ஸுக்கு விருப்பமில்லை. பாரமவுண்ட் பிக்சர்ஸுக்கு அந்த நாட்களில் இருந்த நெருக்கடி காரணமாக படத்தின் வேலைகளை உடனே தொடங்கியாக வேண்டுமென்றும் மேலும் தாமதமானால் பர்ட் லங்காஸ்டருக்கு படத்தின் உரிமையை விற்றுவிடப் போவதாகவும் மேலிடத்திலிருந்து எவான்ஸிற்கு தகவல் வந்தது. படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுக்கும் வேலையில் உடனடியாக இறங்கினார் எவான்ஸ். படத்தை இயக்குவதற்காக முதலாவதாக பேசப்பட்டது இயக்குனர் ரிச்சர்ட்ஸ் ப்ரூக்சிடம் அவரோ புசோவின் கதையிலிருக்கும் அதீத வன்முறை காரணமாக படத்தை இயக்க மறுத்துவிட்டார் தொடர்ந்து மேலும் பதினொரு இயக்குனர்களும் பல்வேறு காரணங்களுக்காக புசோவின் கதையை இயக்குவதற்கு மறுத்துவிட்டனர். பன்னிரண்டு இயக்குனர்களால் மறுக்கப்பட்ட கதையை எடுக்க கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலோ, எந்த ஒரு பெரிய வெற்றியையும் அதுவரை பெற்றிடாத ஒரு இயக்குனரை நம்பி படத்தை ஒப்படைப்பதை எவான்ஸ் விரும்பவில்லை என்ற போதிலும் அந்த சமயத்தில் அந்த கதையை இயக்க வேறு மாற்று இயக்குனர்கள் இல்லாததாலும் மேல் இடத்திலிருந்து வந்த நெருக்கடியினாலும், மேலும் கப்போலோ இத்தாலிய பாரம்பரியத்தை சார்ந்தவர் என்பதால் அந்த கதையை திரை
விடிவில் கொண்டு வருவது அவருக்கு சுலபம் என்ற
நம்பிக்கையிலும் கப்போலோவை யே இயக்க வைக்க எவான்ஸும் சம்மதித்தார்.
நாவலை படமாக்குவது என்பதில் கப்போலோவுக்கு உடன்பாடு இருந்ததில்லை என்ற போதிலும் தன் குடும்பத்தில் அச்சமயம் நிலவிய பண சிக்கல்கள் காரணமாக அவரும் படத்தை இயக்க சம்மதித்தார் அதுவும் அதற்கு முந்தைய படங்களில் அவர் வாங்கிய தொகையை விடவும் குறைவான தொகைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுவரை திரைக்கதை அமைக்கும் பணியில் தனியாக ஈடுபட்டிருந்த புசோவுடன் கப்போலோவும் இணைந்தார் பின் திரைக்கதை அமைக்கும் பணியும் வேகம் பிடித்தது. நாவலில் உள்ள முக்கியமான குறிப்புகளை எல்லாம் தான் தினமும் பார்க்கும் இடங்களில் ஓட்டி வைத்து கொண்டு கதைக்குள் ஆழமாக ஊடுருவி சென்றார் கப்போலோ. புசோவின் நாவலை திரைப்பட வடிவத்திற்கு கொண்டு வருவதில் இரண்டு விசயங்களில் மிகவும் உறுதியாய் இருந்தார் கப்போலோ ஒன்று திரைப்படத்தின் காலக்கட்டம் நாவலில் சொல்லப்பட்ட 1940களில் நடைபெறுவது போலவே அமைப்பது என்பதிலும் கதைக்கு தொடர்புடைய நியூயார்க் நகரிலேயே படமாக்கப்படவேண்டும் என்பதிலும். இந்த இரண்டு விசயங்களுமே பாரமவுண்ட் பிக்சர்ஸின் பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்டது முதலில் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்ற போதும் இந்த கதைக்களத்திற்கு இந்த இரண்டு விசயங்களுமே இன்றியமையாதது என்று கப்போலோ எடுத்துரைக்கவே பின்னர் அரை மனதோடு சம்மதித்தது.
படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பின் போது அடிக்கடி நடிகர்களை மாற்றியும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மேல் திருப்தி இல்லாமல் மீண்டும் மீண்டும் எடுத்த படியால் படத்தின் செலவு அதிகமாகிக்கொண்டே போனது இதனை சற்றும் எதிர்பார்க்காத பாரமவுண்ட் பிக்சர்
ஸோ கார்லியோனை வெளியேற்றிவிட்டு வேறு இயக்குனரை வைத்து படத்தை முடித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அப்போதெல்லாம் ஒருவரை நீக்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வெளியிடுவர் காரணம் அடுத்து வரும் இரண்டு விடுமுறை நாட்கள் இடைவெளியில் அந்த இடத்திற்கான புதியவரை இயல்பாய் பொருத்தி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில். கார்லியோனை நீக்கப்போகும் செய்தி கார்லியோனுக்கு புதன்கிழமை அன்றே தெரியவர
இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார்
கார்லியோன் அதுவரை அவருடன் பணிபுரிந்த 15 பேரை புதன்கிழமை அன்றே வெளியேற்றினார் இதனால் அந்த படத்தின் அனைத்து விசயங்களையும் அறிந்த ஒரே ஒருவர் தாம் மட்டுமே இருக்கிறார் என்பதை உணரச்செய்யவே அப்படி செய்தார் பாரமவுண்ட் பிக்சர்சும் வேறு வழியின்றி இறங்கி வந்தனர். படத்தை தொடங்கி முடிக்கும் வரையிலும் கத்தியின் மேல் நடக்கும் நிலை தான் கப்போலோவுக்கு. அவரை எந்த நேரத்திலும் வெளியேற்றும்
நிலை தொடர்ந்தாலும் எல்லா சிக்கலான நேரத்திலும் அவரின் தலையை காத்தவர் அந்த திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமான விட்டோ கார்லியோன் கதாபாத்திரத்திற்கு கப்போலோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்லன் பிராண்டோ.
டான் விட்டோ கார்லியோனின் கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க மார்லன் பிராண்டோ தான் சரியான ஆள் என்ற கருத்தை முன் வைத்தார் புசோ அதற்கு மிக முக்கிய காரணமாக அவர் கூறியது அந்த கதாப்பாத்திரத்தின் படைப்பு மார்லன் பிராண்டோவுக்கு மட்டுமே ஒத்து போகும் என்றார் புசோ, முன்னரே அவரது கைப்பட ஒரு கடிதத்தையும் பிராண்டோவிற்கு அனுப்பியிருந்தார் அதில் அவர் கூறியிருந்ததாவது “என்னுடைய நாவலான தி காட் ஃபாதரில் வரும் முக்கிய பாத்திரமான காட் ஃபாதராக நடிப்பதற்கு தாங்கள் ஒருவர் தான் சிறந்தவர் என்பதாக உணர்கிறேன் எனது இந்த கருத்தை பாரமவுண்ட் பிக்சர் ஸுக்கும் அனுப்பியுள்ளேன்” என்பதே. கப்போலோவின் பட்டியலில் இருந்தவர்கள் இருவர் ஒருவர் லாரன்ஸ் ஒலிவியர் மற்றவர் புசோவின் விருப்பத்திற்குரிய மார்லன் பிராண்டோ. மார்லன் பிராண்டோவோ தயாரிப்பு நிறுவனம் விதிக்கும் எந்த ஒரு கட்டுபாட்டிற்குள்ளும் தன்னை அடைத்துகொள்ள அனுமதிக்க மாட்டார் மேலும் அந்த காலகட்டத்தில் அவர் சில தோல்விகளையும் சந்தித்திருந்த காரணத்தினால் பாரமவுண்ட் பிக்சர்ஸோ அவர் நடிப்பதை ஏற்கவில்லை லாரன்ஸ் ஒலிவியரை நடிக்க வைக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் சம்மதித்த போதிலும் அவரின் உடல்நிலை அச்சமயத்தில் ஒத்துவராத காரணத்தினால் படத்தில் நடிக்க அவரும் முன் வரவில்லை. பின் மார்லன் பிராண்டோவை நடிக்க வைக்க ஒரு நிபந்தனையை முன் வைத்தது பாரமவுண்ட் பிக்சர்ஸ், அறிமுக நடிகர்களை தேர்ந்தேடுப்பதர்காக செய்யப்படும் ஸ்க்ரீன் டெஸ்டில் அவர் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. கப்போலோவின் வற்புறத்தல் காரணமாக மார்லன் பிராண்டோவும் அதற்கு சம்மதித்தார்.
தி காட் ஃபாதர் - ஒரு வரலாறு (பகுதி2)