புதன், 24 அக்டோபர், 2012

முடிவில் ஒரு தொடக்கம்

சுடுகாட்டு மயானங்களில் பிணங்களுடன் உறவாடும் நடமாடும் பிணமான இவன் தன் பாரச்சுமையையெல்லாம் இங்கே இறக்கி வைக்கிறான் கனத்த இதயங்களே - இவனை கொஞ்சம் தாங்கி கொள்ளுங்கள். அவன் பிறந்தபோது தாழ்த்தப்பட்டவனாம் அதனால் என்றும் இவன் தாழ்த்தபடுகிறான் அவன் ஏழையாய் இருந்ததினால் இன்றும் ஏழையாய் இருக்கிறான் ஆயிரம் மனிதர்களை இவன் நிதமும் காண்கின்றான் அதில் சிலர் முகமூடி அணிந்து...

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொலைந்தவைகள்

நான் தொலைந்தவைகளை பட்டியலிட்டால் குறைந்தது இரண்டு நாளாவது வேண்டும். என் முதல் அகவையில் நான் தொலைத்த மோதிரத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது என் தொலைந்தவைகள்! பள்ளிக்குச் சென்ற முதல் நாளே நான் தொலைத்த என் முதல் பென்சில்! பள்ளிக்குச் சென்ற என் தங்கையை அழைத்து வர மறந்துபோய் அவளையும் தொலைத்திருக்கிறேன் ஒரு பாதி நாள்! பருவ வயதில் அடிக்கடி தொலைத்திருக்கிறேன் என்...

வியாழன், 18 அக்டோபர், 2012

எனது நான்

எனது நான் விழித்துக்கொண்டேயிருக்கிறான் நானோ தாலாட்டிக்கொண்டேயிருக்கிறேன்! எனது நான் ஒரு பயங்கரவாதி எதையும் செய்வான் எனது நான் ஒரு தீவிரவாதி எதற்கும் தயங்கமாட்டான் எனது நான் ஒரு சர்வாதிகாரி நினைத்ததை முடிப்பான் எனது நான் ஒரு தந்திரவாதி எவரையும் கவிழ்ப்பான் எனது நான் பதுங்கியிருக்கும் புலி மனிதமுகத்தில் மிருகம் எனது நான் ஒரு ஊமை பேசவே...

விடியாத வரையில்

கனவுகளோடும், கற்பனைகளோடும் உறவாடிக் கொண்டு பணம் பற்றிய நினைப்பில்லாது மனச் சலனம் சிறிதுமில்லாது சாதி, மத பற்றில்லாது இறைவன் பற்றிய சிந்தனையில்லாது அடுத்தவரை கவிழ்க்கும் சதியை செய்யாது என்னை அழிக்கும் விதியை என்னாது அரசியல் கோட்பாடற்று இன்ப, துன்ப நினைப்புமற்று நான் கிட்டத்தட்ட மனிதனாகவே வாழ்கிறேன் விடியாத வரையில்...

உன்னை கண்ட நொடி

உன்னை கண்ட நொடி            காதலது கொல்லுதடி! உன் கை தொட்டபடி            காலம் ஏங்குதடியே!  விண்ணை எட்டும்படி            உள்ளம் போனதடி ! நிலவும் உன்முன்பு            வந்து துடிக்கிறதே! நெஞ்சை சுட்டதடி          ...

புதன், 17 அக்டோபர், 2012

உறவுகள்

உறவுகள் இப்போதெனக்கு அந்நியமாகவேபட்டன முன்பை விட இப்போது நான் உறவுகளை விட்டு கொஞ்சம் விலகியேயிருக்கிறேன் “போனா தூக்க நாலு பேராவது வேணும்” என்பாள் அம்மா அந்த நான்குபேருக்காகத்தானா நமது உறவுகள்? அந்த நான்குபேரை மட்டும் இப்போது நான் தேடிக்கொண்டிருக்கிறேன்! ...

இன்றைய காதல்

இதயத்தை கடன் வாங்கி சிலகாலம் வாழ்ந்து விட்டு கடனை வட்டியுடன் சேர்ந்து திருப்பித்தரும் கெட்டிக்காரனாக இன்றைய காதலன்! ஆயிரம் அழகாய் இருந்தாலும் துப்பாக்கி பொம்மையையே தேடி விளையாடி இன்னொரு பொம்மையைத் தேடும் விளையாட்டு குழந்தையாய் இன்றைய காதலி! மனதை பார்க்காமல் பணத்தை மட்டுமே பார்க்கின்ற கொடுமைக்கார மாமியாராய் இன்றைய காதல்! ...

நரமாமிச தேவதை

உதிரம் குடிக்கும் உந்தன் அதரங்கள்  நரம்பு கிழிக்கும் உன் நகங்கள்  இதயம் உடைக்கும் உன் கண்கள்  மூளை பிதுக்கும் உன் அகங்கள்  எலும்புகள் நொறுக்கும் பற்கள்  சதைகள் பிளக்கும் உன் கரங்கள்  என்னை உண்ட பின்  உன்னிடம் கேட்டேன்  என்னிடம் சுவை எதில் மிக என்று?  உன் புஜங்கள் தான் என்று  இயல்பாய் சொன்னாய்! ...

சதுரங்கம்

எனக்கும் என் வாழ்க்கைக்குமான  சதுரங்க விளையாட்டில் எப்போதும் தோற்பது நான் தான்! சகலவித திட்டங்களோடும் என்னை தோற்கடிக்கவென்று காய் நகர்த்துகிறது வாழ்க்கை! எந்த திட்டமும் இல்லாமல் இழந்து கொண்டே இருக்கிறேன் ராணியையும், ராஜாவையும்! சிப்பாய்களை வைத்தே என்னை வெல்லும்  திறமை கொண்டது என் வாழ்க்கை!  குதிரையின் வலிமையும்  யானையின் பலமும்  புரிவதே இல்லை...