செவ்வாய், 5 ஜனவரி, 2016

சகிப்பின்மை

சாதாரண மழையின் போதும், பேருந்தினுள்ளும் மழையடிக்க குடை பிடித்து சகித்து கொள்கிறேன்! எதுவுமே செய்திராத அரசியல்வாதி, மறுபடியும் ஓட்டு கேட்டுவர காசு வாங்கி சகித்து கொள்கிறேன்! சாலை விதியை சரியாய் மதித்தும், சில எதிர்ப்பார்க்கும் போக்குவரத்து காவலரிடம் ரூபாய் நூறு நீட்டி சகித்து கொள்கிறேன்! கடவுள் உயர்வு தரும் நம்பிக்கையில், காசு பார்த்து விபூதி தரும் அர்ச்சகரையும் சகித்து...

பசலை நோய்!

உனக்காக நான் இருப்பேன் என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில் எனக்காக நீ இருந்தால் என்னுலகம் முழுதும் உன் காலடியில் வந்து போன உந்தன் நினைவில் வெந்து போகுது எந்தன் இதயம் நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன் இல்லை என்றானால் மண்ணில் புதைவேன் உனது முகம் பார்க்கவே காத்து இருந்தேன் காத்து இருந்தேன் நீ எங்கே எங்கே எங்கே? நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே நீ பேசிய மௌனம் என்...

செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மாவின் அரிவாள்மனை

முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்நறுக்கி தள்ளும்அம்மாவின் அரிவாள்மனை! அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்டஎத்தனையோ பண்ட பாத்திரங்கள்துருப்பிடித்து பழசாகிபழைய இரும்புக்கும்பொங்கல் முந்திய நாள் கருகியும்போன போதும்அரிவாள்மனை மட்டும்பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது! அம்மாவின் அப்பா பட்டறையில்அவளுக்காகவே அவராள்அடிக்கப்பட்டு உருப்பெற்றஅரிவாள்மனையாதலால்அதற்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு! அவசரத்திற்கு...

புதன், 28 அக்டோபர், 2015

ரஷோமான் விளைவு

ஒரு நிகழ்வை அந்த நிகழ்வில் தொடர்புடைய வெவ்வேறு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு முரண்பட்டு விவரிப்பதே ரஷோமான் விளைவு எனப்படுகிறது. இப்படி ஒரு சொற்றொடர் உருவானதற்கு பின்னனியில் இருப்பது புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா இயக்கிய 'ரஷோமான்' என்ற திரைப்படம் என்பது வியப்பான செய்தி. ஒரு கொலையைப்பற்றி அந்த கொலைக்கு சாட்சிகளாய் இருக்கக்கூடிய நான்கு நபர்கள் அவர்களுக்கு...

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்

கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல்...

திங்கள், 7 செப்டம்பர், 2015

கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள் தனி ஒருவன் மற்றும் பாயும் புலி. இரண்டு படங்களுக்கும் உண்டான ஒற்றுமை: இரண்டு படங்களின் ஹீரோக்களும் போலிஸ் அதே போல இரண்டு படங்களின் வில்லன்களும் தன்னுடைய சுய லாபத்திற்க்காக பெற்ற அப்பாவையே கொல்ல துணிந்தவர்கள். ஏ.ஜி.எஸ் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில், ஜெயம் ரவி, அரவிந்த்...

புதன், 26 ஆகஸ்ட், 2015

காப்போலோவின் அடுத்த தலைவலியாக வந்து நின்றவர் படத்தின் எடிட்டிங் வேலைக்காக காப்போலோவால் பரிந்துரைக்கப்பட்டு பணியாற்றி வந்த ஆராம் அவேக்கியான், அதற்கு முன்னதாக இரண்டு படங்களை இயக்கியிருந்த ஆராம் அவேக்கியான் தி காட் ஃபாதர் பட்த்தின் இயக்குனர் பதவியை காப்போலோவிடம் இருந்து பறிக்கும் ஆசையுடன் காப்போலோவைப்பற்றி தவரான விமர்சனைத்தை எவான்ஸிடம் கூறினார். படத்தின் முக்கிய காட்சியான...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

தி காட் ஃபாதர் நாவலை படமாக எடுக்க போவதாக பாரமவுண்ட் பிக்சர்ஸில் இருந்து அறிவிப்பு வந்த அடுத்த நாளே அடுத்த சிக்கலாக வந்து நின்றவர் ஜோ கொலோம்போ. சிசிலியன் மாஃபியா குடும்பங்களை உள்ளடக்கிய ஐந்து மாஃபியா குடும்பத்தில் ஒன்றான கொலோம்போ குடும்பத்தின் தலைவர் தான் ஜோ கொலோம்போ. தி காட் ஃபாதர் நாவலில் வரும் ஐந்து மாஃபியா குடும்பங்களின் பின்னனி மற்றும் இத்தாலியர்களை அதீத கொடூரமானவர்களாக...

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மார்லன் பிராண்டோவை ஸ்க்ரீன் டெஸ்ட் செய்வதற்காக சிறிய வீடியோ ரெக்கார்டருடன் தயங்கியப்படியே பிராண்டோவின் வீட்டிற்குள் செல்கிறார் கப்போலோ. குதிரைவால் சடையுடன் தளர்ந்த உடையான கிமோனோ உடையில் தன் அறையில் இருந்து வெளியே வருகிறார் பிராண்டோ. கப்போலோ அங்கு வருவதற்கு முன்னதாகவே டான் விட்டோ கார்லியோனின் உருவமைப்பு மற்றும் குரல் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தன் மனதில் தோன்றியதை...